Saturday, December 4, 2010

BACKFIRE - Some of us don't get a second chance

இரண்டு மாதங்களுக்கு முன்பு ...

சிவா  சத்யம் திரையரங்கிற்கு சென்று கொண்டிருதான். அன்று சென்னை மிகவும் குளிர்ந்து இருந்தது. இப்படி ஒரு ரொமாண்டிக் கிளைமய்ட்டை சென்னையில் பார்ப்பது அபூர்வம். மணிக்கட்டை பார்த்துவிட்டு மீண்டும் அவனது இருச்சக்கரத்தை முறுகினான். அப்போது அவனது கைபேசி ஒலித்தது, அவனுக்கு தெரியும் அது ஜே-வாகத்தான் இருக்கும் என்று, ஹலோ! ! ஜே I'm on the way , அவனது நாக்கில் சரளமாக வேற்று தாய் உலவினால். ஜே, சிவாவின் காதலி, இன்னமும் சொன்னால், மனியாவியாகபோறவள் . அழகான மேநி, தீர்க்கமான முகம், அழ்ந்த சிந்தனை கொண்டவள். கடவுள் அழகை பதம்பார்த்து கொடுதிர்ப்பான். சுருக்கமாகச்சொன்னால், ஈர்க்கும் பார்வையாலும்   , ஆற்றும் செயலினாலும் , ஆண் வர்க்கத்தை செயலிழக்க செய்பவள். சிவாவும் அவளுக்கும் கடந்த 23 ஆண்டுகளாக பழக்கம். இருவரின் தந்தைகளுக்கும்  வணிகத்தில் தொடங்கிய நட்ப்பு, இப்போது உறவில் முடியபோகிறது என்று ஒரு நிம்மதியுடன் இர்ருக்கிற தருணம். சிவா, ஜே இருவரும் ஐ.டி துறையை சார்ந்தவர்கள். சென்னைக்கு மட்டும் அல்ல இவர்களுக்கும் இது ஒரு அறிய நாள் தான். இதே தேதியில் போனவருடம் ஜே தனது காதலை முதலில் சொன்னால். இக்கால பெண்களை போல் ஜெக்கு பயம் இல்லை என்றாலும் நாணம் இருந்தந்து. தனது வண்டியை நிறுத்தி விட்டு ஜே வை பார்க்கச் சென்றான். 

ஜே க்கு சிவா-வை பார்த்தவுடனே பிடிக்கவில்லை என்றாலும், பழகியபின் பிடித்துவிட்டது. சிவா ஜே-வை போல் அல்ல, அவன் சற்று முன்கோபி. கோபத்தில் என்ன செய்கிறான் என்றோ என்ன பேசுகிறான் என்றோ அவனுக்கு தெரியாது. ஆனால் மிகவும் நல்லவன், யாருக்கும் தீங்கு நினைக்காதவன். வழக்கம் போல் படம் இருவருக்கும் போர் அடிக்க, பாதியிலே உண்ண கிளம்பினர். ஒரு உயர் தர வர்க்கத்தின் உணவுவிடுதிர்க்கு சென்றார்கள். தனிமையில் இருவரும், இது தான் நல்ல தருனமாக சிவாவிற்கு தோன்றியது. இருந்தாலும் சற்று மனம் படபடத்தது. ஜே வாயில் நுழையாத உணவை இருவருக்கும் சொன்னால். ஜே, இந்த வாட்டி என்னகும், என் பாஸ்-க்கும் சண்டை முற்றிவிட்டது, அதனால் நா, தெரியும் நீ எப்பவுமே இப்படி தான் பண்ற, என்று அவன் முடிக்கும் முன்னே குருகிட்டல், இதோட, நீ நாலு மாசத்துல நாலு கம்பெனி மாரிட்ட. இது உன்னகே சொல்ல வெக்கமா இல்ல. கோவம் வந்தா நீ எதுவேனாலும் பண்ணுவியா?, என ஜே கொந்தளித்தால். ஜே , ஜே ஸ்டாப் திஸ், இது ஹோட்டல் கத்தாதே!! ஆச்சிர்யம் ஊட்டும் வகையில் சிவா அன்று பொறுமையுடன் இருந்தான். ஜே கோபித்து கொண்டு பாதியில் கண்ணீர் மல்க சென்றுவிட்டால். போகும் முன்னே நீ எப்போ ஒரு நிரந்தர வேளையில் இருக்கியோ அப்போ வந்து என்கிட்டே பேசு, அப்பா தான் நம்ம கல்யாணமும் கூட. 

இரண்டு மாதங்களும் ஓடின, சிவா வேலை தேடிக்கொண்டே தான் இருந்தான். ஜெவிடம் இருந்து ஒரு தகவலும் வரவில்லை. அவன் அவ்வப்போது அவள் வீட்டிற்கு சென்றபோதும் அவள் அவனை பார்க்க மறுத்தால்.இதனால் நட்புடன் இருந்த குடும்பர்த்திற்குள் கசப்பு ஏற்பட்டது. இன்று அவள் பிறந்தநாள், அவன் ஒரு போதும் அவள் பிறந்தநாளை தவறியதில்லை, நாளிரவில் அவன் தொலைபேசியின் மூலம் அழைக்க முயன்றான், அவள் எடுக்க வில்லை. சிவாவிற்கு பொறுமை பொய் விட்டது. என்னதான் காதலியாக இருந்தாலும் பொறுமைக்கு ஒரு எல்லை உண்டு, என்ன இவ இஷ்டத்துக்கு ஆடுறா? கோபத்தினால் அவன் கண்கள் சிவந்தன. அன்று இரவு முழுவதும் அவன் உறங்க வில்லை. 

ஸ்மிர்த்தி, ஜே-வை போல் உயரம், அதே நிறம், தூரத்தில் பார்த்தல் ஜே என்றே நினைக்க கூடும். அனால் மிகவும் பயந்த சுபாவம் கொண்டவள். வீடிற்கு செல்ல மகள். பாசத்திற்கு தாய், அன்பிற்கும் பணத்திற்கும் தந்தை, என சுகமான வாழ்கை வாழ்பவள். அன்று இரவு அவள் சுகமாக உறங்கினால். நாளை அவளுக்கு பதவி உயர்வு. பதவி உயர்வு என்றல் யாருக்கு தான் குஷியாக இர்ருகாது? அதுவும், முதல் வேளையில் கிடைக்கும் முதல் பதவியுயர்வு என்றல் அது ஒரு ஆலதி சுகம் தானே, மறுநாள் காலையில் வைகரை துயில் எழுந்து அலுவலகம் கிளம்பினால். ஏனோ இன்று அவள் ஸ்கூட்டி புறப்பட மறுத்தது. ஒரு வேலை விலங்குக்கு மட்டும் இல்லாமல் நாம் அன்புடன் வளர்க்கும் என்திரத்திர்க்கும் மரணம் வருவது தேரியுமோ? கால் மணிநேரம் போரிட்டு புறப்பட்டால். அன்று அவளுக்கு பதவி உயர்வு வந்தபின் நண்பர்கள் எல்லாம் ட்ரீட் கேட்க்க, அன்று இரவு அம்மாவிற்கு கால் செய்தால். அம்மா பிரெண்ட்சுக்கு ட்ரீட் மா, அதுனால இன்னிக்கி நைட் லடேஆகும் மா. அன்று மிகவும் சந்தோஷமாக இருந்தால். ராம், ஸ்ம்ரிதியுடன் வேலை பார்ப்பவன். ஒரு வருடத்தில் நல்ல நண்பர்களாக மாறினார். அன்று இரவு ட்ரீட் முடிந்த பிறகு, ராம் நெருங்கி வந்தான், ஸ்ம்ரிதி, ஆங் என்றவள் என்ன ராம் என்னமோ சொல்லணும் சொல்லனும்னு சொன்ன, ஆனா காலைலேர்ந்து நீ ஒன்னுமே சொல்லலடா. என்ன விஷயம்? ரொம்ப சஸ்பென்ஸ் வைக்காத. நைட் பதினொன்று ஆச்சி. 
ஸ்ம்ரிதி எங்க வீட்டை பற்றி நீ என்ன நினைக்கிற?
ஏன் அழகான தங்கை, அன்பான அப்பா அம்மா, ஏன் திடீர்னு கேட்கிற? என்று புரியாம கேட்டல். இல்ல நான் ஒன்னு சொன்ன தப்பா எடுத்துக்க கூடாது என்று குலவிணன்.
 இல்ல டா, சொல்லு என்றால், அனால் சற்று பயம் பிடித்து கொண்டது அவளிற்கு, நைட் பத்னொன்று மணிக்கு ஒரு ஆண் அதுவும் பழகின ஒருவன் இப்படி பேசினால் அது கண்டிப்பாக காதலாக தான் இருக்க வேண்டும் என்று எண்ணினால். ஒரு வேலை நம்கிட்ட ப்ரொபோஸ் பண்ண போறனோ என்று பயந்தால்.
 இல்ல , இல்ல , நான் ஒரு பொன்னை காதலிக்கறேன், நீ தான் எப்படியாவது எங்க அம்மா கிட்ட பேசி சம்மதம் வாங்கித்தரனும். அவ பேரு ரேக்கா, என்னோடு கல்லூரியில் படித்தவள். நீ தான் எங்க அம்மா கிட்ட நல்ல பெசுவயே!!! கொஞ்சம் சொல்லி புரியவைக்கணும். ப்ளீஸ் என்றான் தயங்கியவாரே .
அப்பட என்று நிம்மதியுடன் போடா லூசு இதுதான் மேட்டர்-அஹ நான் பயந்தே போயிட்டேன். கவலை படாதே இந்த சண்டே கண்டிப்பா சொல்றேன். பாய் டா என்னக்கு லேட் ஆகுது நான் கெளம்பறேன் என்றவள் ஸ்கூட்டியுடன் புறபட்டால். 
சிவா அன்று அவன் வீட்டில் யாரும் இல்லாததினால், வழக்கமாக செல்லும் வ்யீன் ஷாபிர்க்கு சென்றான், அப்போ வழக்கத்துக்கு மாறாக ஒருவர் அவனுக்கு பரிச்சியம் ஆனான். இவன் கோபமும், அழுகையும் கலந்து அவனது கதையை சொன்னான். 
ச, இந்த பொண்ணுக இப்படி தான் சார். நம்ம எல்லாம் அவள்களுக்கு உதட்டு சாயம் மாதிரி, பிடிக்க வில்லை என்றல் மாற்றிவிடுவார்கள். இந்த மாதிரி பொண்ணுகளை கொல்லனும் சார் கொல்லனும். என்று சொன்ன வாரே ஒரு பொட்டலம் எடுத்து அவன் வாங்கி வந்த புகைபையில் போட்டு இழுத்தான் ,,,
சிவா சார், இத இழுத்து பாருங்க, ஒரே ஒரு வாட்டி ட்ரை பண்ணுங்க சார். என்று அந்த கஞ்ச புகையை கொடுத்தான். உடனே ஒரு குட்டி பையன் வந்து சார் பார் முடபோறோம் சார் கெளம்புங்க என்றான்.
சிவாவிற்கு அந்த கஞ்ச நால்வே வேலை செய்தது. அந்த முகம் தெரியாத நண்பன் கடைசீயில் சொன்னது தான் ஓலித்து கொண்டே இருந்தது. 
இந்த மாதிரி பொண்ணுகளை கொல்லனும் சார் கொல்லனும்" மீண்டும் ஒலித்தது. கோபம் தலைகேய்ரியது, அவன் வீடிற்கு செல்லாமல் ஜே வீடிற்கு வண்டியை திருப்பினான். 
போதையில் வேகமாக ஓட்டியவன் சடார்ரென்று எதிரே வந்த வண்டியில் மோதினான். இருவரும் கிழே விழுந்தனர்.
 யோவ் பார்த்து வரமாட்ட!! கத்தினால் அதில் பயணித்த பெண்
கீழே விழுந்தவன், ஜே நீயா!!!! என்றான், உண்ண தாண்டி பார்க்க வந்துட்டு இருதேன், நீயே மாட்டிகிட்டியா !!! என்று வெறியுடன் சிரித்தான்.
புரியாமல் அந்த பெண் திகைத்தாள், அதற்குள் 
ஏண்டி உன்னகா வேன்னும்னா, நீங்க வச்சுக்குவீங்க, இல்லைனா தூக்கிபோடுவீங்க!!!! நான் என்ன உன்வீட்டு வேலக்கரனா? உன்ன எல்லாம் கொல்லனும் டி, என்று கீழே கிடந்த இரும்பு தடியை எடுத்து அடிக்க ஓங்கினான்!!
பயன்தவரே அவள் கீழே சாய்ந்தால், அவளுக்கு எதுவும் புரியவில்லை.. 
அண்ணா, ப்ளீஸ் நா, நீங்க யாருன்னே என்னக்கு தெரியாது நா, ப்ளீஸ் என்ன விட்டுடு, என்று யாரும் இல்லாத சாலையில் கதறினால்.
ஏண்டி இருவது வருஷம் பழகிட்டு இப்ப்போ தெரியாத மாதிரி நடிக்கிறியா!!! உன்னன சும்மாவே உடக்கூடாது டி, உன்னயெல்லாம் கொல்லனும், கொல்லனும், என்றவரே தடியால் அவள் காலில் ஓங்கி வைத்தான், "அம்மா" என்று ஆலறினால், 
நீ யாருன்னே என்னக்கு தெரியாது, ப்ளீஸ் என்ன விட்டுடு, என்ன விட்டுடு என்று அவள் நடுங்கினாள்.
சாவுடி சாவு, என்று மீண்டும் அவள் நெற்றியில் தடியால் அடித்தான், அவளின் இரத்தம் அவன் முகத்தில் தெளித்தது. செத்துதொல டி என்று மீண்டும் இரண்டு முறை அவளை தாக்கினான். அவள் துடித்தவரே செங்குருதியில் மூழ்கினால்....

மறுநாள் மதியம் மூன்று மானிற்கு சிவா எழுந்தான், ச இனிமே சரக்கு அடிக்க கூடாது, என்று முணுமுணுத வாரே பல் துலக்க சென்றான். எதர்ச்சியாக கண்ணாடியை பார்க்கும் பொது திடுகிற்றான், அவன் முகம் எல்லாம் ரத்த கரை, அவனிடம் இருந்து இரத்த வடை வீசியது. 
அய்யய்யோ, நேத்து ஜே வை அடிச்சுட்டேனே, என்று பயந்து வேக வேகமாக, உடைகளை மற்றறி விட்டு ஜே வீடிற்கு சென்றான். வண்டியை ஓட்டும் போது பல சிந்தனைகள் ஓடின.
ஒரு வேளை ஜே - வை கொன்னுடனோ!!! இல்ல அடிசுடனோ!!! என்று பட படத்தது. வேகமாக ஜே வீடிற்கு சென்றான், 
கால்லிங் பெல்லை அழுத்தினான். ஜே!!  ஜே!! என்று இருமுறை கத்தினான். ஜே கதவை திறந்தால் ஏந்த வித காயமும் இல்லாமல்.
 கண்ணீருடன் சாரி டா, உன்னோட முன்கோபத்தை நீ மாதிக்கனும்ம்னு உண்ண ரொம்ப காயபடுதிடேன், சாரி டா, என்று அவனை கட்டி கொண்டால். 
சிவாவிற்கு ஒன்றும் புரியவில்லை, திகைத்தான், ஜே விடம் இதை பற்றரி அவன் எதுவும் பேசவில்லை, இருவரும் பேசிவிட்டு, சிவா வீடு திரும்பினான். 
ஒரு வேளை அது கனவோ!!! என்று சந்தோசமாக இருந்தான். வீடு திரும்பியவன் அனாதையாக இருந்த நாழிதல்லை எடுத்தான். தலைப்புசெய்தியில் "ஸ்ம்ரிதி என்ற பெண்மணி கோலை" என்று இருந்தது. அப்போதுதான் சிவாவிற்கு அது கனவு இல்லை என்று தெரிந்தது. அவன் மேலேயே அவனுக்கு கோபம் வந்தது. குற்ற உணர்ச்சி அவனை துளைத்தது. தீவிர போரடர்த்திர்க்கு பிறகு, குற்ற உணர்ச்சி வென்றது, சிவா தற்கொலை செய்து கொண்டு தோற்றான்.

5 comments:

  1. https://www.youtube.com/edit?o=U&video_id=3eJaolOteks

    ReplyDelete
  2. super post
    https://www.youtube.com/edit?o=U&video_id=lR-9f_sX4CE

    ReplyDelete
  3. excellent post
    https://www.youtube.com/edit?o=U&video_id=TNlPxlJYs5I

    ReplyDelete
  4. https://kamar112233.blogspot.com/2010/05/blog-post.html?showComment=1565412210471#c2540997931107350825

    ReplyDelete